இந்தியாவின் சார்பில் மாலத்தீவுகளுக்கு 100 மில்லியன் டாலர் கூடுதல் கடன் உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி உடனான சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். கிரேட்டர் மாலே வளர்ச்சி திட்டங்களையும் அவர்கள் கூட்டாக தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவில் இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் முழுமையடைய இந்த கடன் உதவிகள் உதவும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, ராஜாங்க உறவுகளையும் தாண்டி இருநாடுகளுக்கும் இடையே வலுவான நட்புறவு நிலவுவதாக குறிப்பிட்டார். முன்னதாக இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.