பிரிட்டனின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெலத் போட்டியின் 4ஆம் நாளில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை சுசிலா தேவி வெள்ளி வென்றார். 71 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்றார்.
60 கிலோ எடைப்பிரிவில் இந்திய ஜூடோ வீரர் விஜய்குமார் வெண்கலப் பதக்கம் பெற்றார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.