இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த 22 வயதுடைய இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து 26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொற்று பாதித்த நபர் கடந்த ஜூலை 30ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், குரங்கு அம்மை நோயால் அவர் இறந்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் கேரளா வரும் ஒரு நாளுக்கு முன்பே குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.