ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கிடைத்த மாத வருவாயில் இது இரண்டாவது அதிகத் தொகையாகும். மகாராஷ்டிர மாநிலம் 22 ஆயிரத்து 129 கோடி ரூபாயுடன் வரி வருவாயில் முதலிடத்தில் உள்ளது.
9795 கோடி ரூபாய் வருவாயுள்ள கர்நாடகம் இரண்டாமிடத்திலும், 9183 கோடி ரூபாய் வருவாயுள்ள குஜராத் மூன்றாமிடத்திலும், 8449 கோடி ரூபாய் வரி வருவாயுள்ள தமிழகம் நான்காமிடத்திலும் உள்ளன.