காஷ்மீரில் ராணுவத்தினருக்கும்-பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான ராணுவ மோப்ப நாய்க்கு வீரர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பாராமுல்லா மாவட்டத்தில் வானிகாம் பகுதியில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, பஜாஜ் மற்றும் ஆக்சல் என்ற 2 ராணுவ நாய்கள் பாடி கேமராக்கள் அணிந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டிற்குள் அனுப்பப்பட்டன.
பாதுகாப்புப் படையினருக்கும்-பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், மறைந்திருந்த பயங்கரவாதிகள் ஆக்சல் என்ற மோப்ப நாயை நோக்கி சுட்டதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தது.