சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத், நள்ளிரவில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பத்ராசால் நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சஞ்சய் ராவத் இல்லத்தில் சுமார் 9 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள், கணக்கில் வராத 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியதாக கூறப்பட்ட நிலையில், சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் அவரை கைது செய்தனர்.
இன்று காலை 11.30 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.