தான் பேச ஆரம்பித்தால் பூகம்பம் வெடிக்கும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், சிலரை போல் ஆண்டுதோறும் விடுமுறைக்கு வெளிநாடு செல்வதில்லை என சாடினார்.
முதலமைச்சர் பதவிக்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்ததோடு, பால்தாக்கரேவின் கொள்கையை சமரசம் செய்தது துரோகம் இல்லையா? என்றும் உத்தவ் தாக்கரேவுக்கு கேள்வி எழுப்பினார்.