மும்பை விமான நிலையம் அருகே உள்ள 48 உயரமான கட்டடங்களின் மேல் மாடிகளை இடிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான திட்டத்தைத் தயாரித்து வருமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்டப்பட்ட கட்டடங்களின் சில பகுதிகளை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விதிகளை மீறி கட்டப்பட்ட 61 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இந்த உயரமான கட்டடங்களால் விமானங்களைத் தரையிறக்கவும் வானத்தில் பறக்க செய்யவும் இடர் ஏற்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.முதல் கட்டமாக 48 கட்டடங்களை இடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.