அசாமில் அல் கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்த மதரஸா ஆசிரியர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேச பயங்கரவாத அமைப்பான அன்சாருல்லா பங்ளா குழுவினருடன் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக மதரசா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இதர 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.