நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகத் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் திங்கள் முற்பகல் 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, அக்னிபாத் திட்டம் ஆகியன குறித்து விவாதிக்க வேண்டும் என அவையின் நடுப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.
இதையடுத்து முதலில் நண்பகல் வரைக்கு அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் நாள் முழுவதற்கும் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன.