மத்திய அரசின் கன்வர்ஜன்ஸ் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனம் நாட்டின் 16 நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான 810 சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மும்பை - புனே, அகமதாபாத் - வதோதரா, டெல்லி - ஆக்ரா, ஆக்ரா - நாக்பூர் நகரங்களிடையான நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 16 சாலைகளில் பத்தாயிரத்து 275 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கும் வகையில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது.
ஒவ்வொரு 25 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு 50 கிலோவாட் திறனுள்ள சார்ஜரும், ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு 100 கிலோவாட் திறனுள்ள சார்ஜரும் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.