குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய வழிகாட்டல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மையால் பாதிக்கட்டோருக்கு காய்ச்சல், தலைவலி, இருமல் தொண்டை வலி ஏற்படுகிறது.
பாதிப்புகள் முழுவதும் குணமாகும் வரை 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக்கழுவ வேண்டும் என்பன போன்ற வழிகாட்டல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.