ராஜஸ்தானின் ஜோத்பூரில் மழைநீரால் சூழப்பட்ட குழிக்குள் நான்கு குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழந்தன.
ஜோத்பூர், பில்வாரா, சித்தூர்கர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால் உருவான வெள்ளத்தில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தங்கியுள்ள மக்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.