லடாக் போன்ற 18 ஆயிரம் அடி உயரமுள்ள இடங்களிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க இந்திய ராணுவம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.
இரண்டாண்டுகளுக்கு முன் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பின், சீனா 5ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தி தொலைத்தொடர்பை விரிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், உயரமான மலைப் பகுதிகளிலும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை மேம்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 4ஜி, 5ஜி ஓராண்டுக்குள் வழங்க நெட்வொர்க் வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் ராணுவத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.