குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு நேற்று பதவியேற்ற பிறகு குடியரசுத்தலைவர் மாளிகையில் முதல் முறையாக அவரை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து பேசினார்.
இதேபோல் குடியரசு முன்னாள் தலைவர் பிரதீபா பாட்டில் தனது மகளுடன் சென்று குடியரசுத்தலைவரை சந்தித்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, பீகார் மற்றும் ஆந்திர மாநில ஆளுநர்களும் இன்று குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.