பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நாளை மறுநாள் தொடங்கும் காமன்வெலத் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மெக்தா தெரிவித்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா காயம் அடைந்ததால், முழுமையான உடற்தகுதி பெற முடியவில்லை என்றும் 20 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.