டெல்லியில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் எச்.ஐ.வி நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கடந்த 5 மாதங்களாக எச்.ஐ.வி நோயாளிகளுக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் டெல்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அலுவலகத்திற்கு முன்பு எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.