ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இடை விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் உருவான வெள்ளத்தில் சாலையோரம் நின்ற கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மாநிலத்தில் கிழக்கு பகுதியில் உள்ள அலிகர்க், அஜ்மீர், பில்வாரா, பிரதாப்கர்க் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச கனமழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.