2023 ஆம் ஆண்டில் சீனாவை மிஞ்சி உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கம் குறித்த ஐ.நா.வின் கணிப்புகளில் வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னதாக உலக மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடியை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மக்கள் தொகையை விட 2050ஆம் ஆண்டிற்குள் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் 43 சதவீத அளவுக்கு மக்கள் பெருக்கம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேநேரம் 2050ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் உள்பட 41 நாடுகளில் மக்கள் தொகை குறைந்து உலக மக்களை தொகையை சமன் செய்யும் சூழல் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.