ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த நுண் ஓவியக் கலைஞரான ஈஸ்வர் ராவ், குடியரசு தலைவராக இன்று பொறுப்பேற்க உள்ள திரௌபதி முர்மூவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவருடைய உருவத்தை கண்ணாடி பாட்டிலுக்குள் வரைந்து கவனம் ஈர்த்துள்ளார்.
இதே போல், ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த மணல் ஓவிய கலைஞரான சத்யநாராயண் மகாராணா என்பவர் மணல் அனிமேஷன் மூலம் திரௌபதி முர்மூவின் உருவத்தை வரைந்துள்ளார்.