மத்தியப்பிரதேச மாநிலத்தில் சாலையோரத்தில் சோளம் விற்கும் சிறுவனிடம் மத்திய இணை அமைச்சர் Faggan Singh Kulaste பேரம் பேசி 45 ரூபாய்க்கு 3 சோளம் வாங்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
கடந்த 21ந்தேதி மத்திய எக்கு துறை இணை அமைச்சர் Faggan Singh Kulaste கார் மூலம் Seoniல் இருந்து Mandla சென்று கொண்டு இருந்தார். அப்போது செல்லும் வழியில் சாலையோரத்தில் சிறுவன் ஒருவன் சோளம் விற்பதைக் கண்ட அவர் காரை நிறுத்தி சோளத்தை வாங்கினார்.
அவனிடம் சோளம் விலை குறித்து விசாரித்த போது ஒரு சோளத்தின் விலை 15ரூபாய் என்று சொல்லப்பட்டது. அதற்கு மத்திய இணை அமைச்சர் இந்த சோளத்தின் விலை உயர்ந்த து என்று கூறி 45ரூபாய்க்கு 3 சோளத்தை வாங்கினார்.
மத்திய அமைச்சரின் இந்த செய்கைக்கு எதிர்கட்சிகள் கேலியும் கிண்டலும் தெரிவித்து இருந்தன.இதற்கு டுவிட்டரில் பதிலளித்த மத்திய அமைச்சர், நாம் அனைவரும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் கடைக்கார ர்களிடம் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது அவர்களுக்கு வேலை வாய்ப்பையும், கலப்படமற்ற பொருட்களையும் உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.