பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் மீண்டும் ஊடுருவிய டிரோன் மீது எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
கனாச்சக் செக்டர் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் உஷார்படுத்தப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த டிரோன் கீழே விழுந்ததா அல்லது பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பிச் சென்றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
தொடர்ந்து, எல்லைக் கோடு அருகே ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார், சிறப்பு கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.