உத்தரபிரதேச மாநிலத்தில் கன்வார் புனித யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று அதிகாலை குவாலியரை சேர்ந்த 7 பேர் பாத யாத்திரையாக சென்ற போது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.