பத்து ஆண்டுகளில் இலங்கைக்கு எட்டுத் தவணையாக ஆயிரத்து 850 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ரயில்வே, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிபொருள் மற்றும் உரம் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நிதி நெருக்கடியில் சிக்கிய போது எரிவாயு, மருந்து, எரிபொருள் வாங்க 3 புள்ளி 8 பில்லியன் டாலர் கடன் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகவும், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் உதவி வழங்கப்பட்டதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.