ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக மேற்குவங்க அமைச்சரின் உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் 20 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்க தொழில்துறை அமைச்சரும் முன்னாள் கல்வி அமைச்சருமான பர்தா சாட்டர்ஜி, கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் ஆதிகாரி உள்ளிட்டோர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பர்தா சாட்டர்ஜியின் நெருங்கிய நண்பரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பணமும், 20-க்கும் மேற்பட்ட செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பணிநியமன முறைகேடு வழக்கை சி.பி.ஐ.யும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன.