நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் ஐந்தாவது நாள் அமர்வில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் இந்திய அண்டார்டிக் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா அண்டார்டிக் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், அண்டார்டிக் ஒப்பந்தத்தின்படி கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளை செயல்படுத்துவதற்கும் வழிவகை செய்வதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.