வாரணாசி கியான்வாபி மசூதிக்குள் இந்து அடையாளங்கள் கிடைத்திருப்பதால் அங்கு சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து வருவதால் அதன் தீர்ப்பு வரும் வரை பொறுமை காப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முஸ்லீம்கள் அங்கு வழிபாடு நடத்தத் தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.