செக்-இன் கவுண்ட்டர்களில் வழங்கப்படும் போர்டிங் பாசுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகம் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செக்-இன் கவுண்ட்டர்களில் வழங்கப்படும் போர்டிங் பாஸ்களுக்கு சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்தில் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது விமான விதிகள் 1937-க்கு எதிரானது என்று குறிப்பிட்டு உள்ளது.