பாரதியார் பாடலை தூய தமிழில் பாடிய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இரு சகோதரிகளை பிரதமர் மோடி தமிழில் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு எனும் தமிழ் பாடலை பிழையில்லாமல், அந்த சகோதரிகள் பாடியுள்ளனர்.
இதைக் கண்டபோது தான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டதாகவும், ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு பாராட்டுக்கள் என்றும் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.