உலகளாவிய பாஸ்போர்ட் தர வரிசையில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
லண்டனைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் Henley என்ற குடியேற்றம் தொடர்பான ஆலோசனை நிறுவனம் 2022ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் சேவை குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜப்பான் பாஸ்போர்ட் முதல் இடத்திலும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் 2வது இடத்திலும், தென்கொரிய பாஸ்போர்ட் 3ஆம் இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 87வது இடத்தில் உள்ளது.