பல கோடி ரூபாய்க்கு சீன கடன் செயலிகளை நடத்திய 4 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் அவர்கள் சீன கடன் செயலி நிறுவனங்கள் மூலம் இந்தியா முழுவதும் பலரை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்ததாக காவல்துறை கூறியுள்ளது. அவர்களிடமிருந்து 141 சாதாரண போன்கள், 10 ஆன்ட்ராய்ட் போன்கள், 3 லேப்டாப்கள் மற்றும் 153 ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே பலரை மிரட்டி பணம் பறிக்கும் வகையில் ஆபாச மற்றும் மார்பிங் செய்யப்பட்ட படங்களை அனுப்பியதாக 149 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.