மின்சார இருசக்கர வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் ஏற்கெனவே ஐ கியூப் என்கிற மின்சார இருசக்கர வாகனத்தைத் தயாரித்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மாதம் 25 ஆயிரம் அலகுகள் என்கிற அளவிலும், அடுத்த ஆண்டில் மாதம் ஐம்பதாயிரம் அலகுகள் என்னும் அளவிலும் உற்பத்தித் திறனை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.