ஜார்கண்ட் மாநிலத்தில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
ராஞ்சியின் துப்புடனா பகுதியில் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சந்தியா டாப்னோ, பிக் அப் வேன் ஒன்றை நிறுத்த முற்பட்ட போது, அவர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்து வேன் ஓட்டுநர் தப்பியோடினார்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.