ஹரியானாவில் கனிம கொள்ளையை தடுக்கச் சென்ற காவல்துறை டிஎஸ்பி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
ஆரவல்லி மலைத் தொடர் அருகே பச்சகான் பகுதியில் சட்டவிரோதமாக கனிம கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில் காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.
கற்கள் ஏற்றிய லாரியை டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ்னாய் தடுத்த நிலையில், அதன் ஓட்டுநர் அவர் மீது லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். அவருடன் சென்ற இரு காவலர்கள் குதித்து தப்பியதால் உயிர்பிழைத்தனர்.