ஒடிசா மாநிலத்தில், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 5 பேர் கும்பலிடம் இருந்து தப்புவதற்காக பள்ளிக்கூட மாடியில் இருந்து குதித்த சிறுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜஜ்புர் மாவட்டத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு, அந்த சிறுமி சகோதரனுடன் சென்ற போது வழியில் கனமழை பெய்துள்ளது. அப்போது 5 பேர் கும்பல் ஒன்று அவர்களை அருகில் உள்ள பள்ளியில் தங்கி விட்டு மழை விட்டதும் செல்லுமாறு கூறியுள்ளனர்.
சிறிது நேரத்தில் பள்ளிக்கு வந்த அந்த 5 நபர்களும், சகோதரனை அடித்து விரட்டி விட்டு, சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க மாடிக்கு ஓடிய சிறுமி அங்கிருந்து கீழே குதித்துள்ளார். சகோதரன் கூச்சலிட்டதை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.