கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமானத்தில் முழக்கமிட்ட காங்கிரஸ் தொண்டர்களை தடுத்து நிறுத்தி தள்ளிய இடதுசாரி கூட்டணி தலைவர் ஜெயராஜனுக்கு இண்டிகோ விமானம் மூன்றுவார பயணத் தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் 14ம் தேதி கண்ணூரிலிருந்து திருவனந்தபுரம் சென்ற விமானத்தில் பயணித்த பினராயி விஜயனுக்கு தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாகக்கூறி காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கமிட்டனர்.