மும்மையில் செல்போன் திருடுபவர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 490 ஸ்மார்ட் போன்களை பறிமுதல் செய்தனர்.
திருடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றி மும்பையில் விற்பனை செய்து வந்ததும், ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்ற முடியாத செல்போன்களை மற்ற மாநிலங்களில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.