நீதித்துறையில் உள்ள காலி இடங்களை நிரப்புவது மட்டுமின்றி உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேண்டுகோள் விடுத்தார்.
ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், குற்றவியல் நீதித் துறையில் இருக்கும் சிரமமான செயல்முறைகள் தான் பெரிய தண்டனைகளாகும் என்றார்.
அவசரமான, கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள் தொடங்கி, ஜாமீன் பெறுவதில் உள்ள சிரமமான செயல்முறை வரையிலான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதில் நீதித்துறை எப்போதும் முன்னோடியாக உள்ளது என்றார்.