ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பின்னால் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால், இந்தியாவில் உள்ள விஜபி மற்றும் விவிஐபிக்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் விஐபி-கள் பங்கேற்கும் போது அவர்களது பின்புறம் உள்ள பகுதிகளையும் பாதுகாப்பு அரண் அமைத்து கண்காணிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து பாதுகாப்புப்படைகள், அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், காவல்துறைகள் ஆகியவற்றிற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது