ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளரும், சாஹிப்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பங்கஜ் மிஸ்ராவின் வங்கி கணக்குகளில் இருந்த 11 கோடியே 88 லட்சம் ரூபயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த 8ம் தேதி சட்டவிரோத சுரங்க வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 19 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதில், கணக்கில் வராத 5 கோடியே 34 லட்சம் ரொக்கத்தையும், துப்பாக்கி தோட்டாக்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரிகளையும் மூடி சீல் வைத்தனர்.