உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு உலக வர்த்தக அமைப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைன் - ரஷ்யா போரால் உலகின் பல நாடுகள் உணவு பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், உணவு பாதுகாப்பு மற்றும் பசியினை போக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.