மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பை, புனே, உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தீவிர கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாசிக், புனே, பால்கர் மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்யக் கூடும் என வனிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, கட்சிரோலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆறு, குளங்கள் நிரம்பு தண்ணீர் ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடாக மாறின. சாலைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் கிராமங்கள் தனித்தனி தீவுகள் போல் மாறின.