உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக அழியவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் படிப்படியாக உருமாற்றம் அடையும் எனவும், மேலும் உருமாற்றமடைய வாய்ப்பிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.