தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கான தண்டனை விவரத்தை உச்சநீதிமன்றம் நாளை அறிவிக்கிறது.
இந்தியாவில் 9ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவர் நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகளுக்கு 40 மில்லியன் டாலர் பரிவர்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்ததாக மல்லையாவை குற்றவாளி என தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அவர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக பலமுறை வாய்ப்பளித்தது.
எனினும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகததை அடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது.