டெல்லி ஏய்மஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் மகன் தேஜஸ்வி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வதந்திகள், பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும்அவர் கேட்டுக் கொண்டார். தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் பாட்னாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட லாலு பிரசாத் நேற்று காலை ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.