ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை மனித உரிமை மீறல் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வெங்கடேஷ் ஷெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவது மனிதாபிமானமற்ற செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து முடிவடைந்த நிலையில், இதேபோன்ற மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை சுட்டிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.