மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, ராம் சந்திர பிரசாத் சிங் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இருவரது பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது.
இதனிடையே, டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சவைக் கூட்டத்தில், முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி.சிங் ஆகிய இருவரும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஆற்றிய பங்களிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
ராஜினாமா செய்துள்ள முக்தர் அப்பாஸ் நக்வி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.