மின்னணு சாதன நிறுவனமான விவோவின் பீகார் அலுவலகம் உள்ளிட்ட நாட்டின் 44 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பாட்னாவில் உள்ள மால் ஒன்றில் அமைந்துள்ள விவோ அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பணப்பரிவர்த்தனை
தொடர்பான முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து இச்சோதனை மேற்கொள்ளப்படுவதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பு அளித்து வருவதாக விவோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.