மகாராஷ்ட்ராவில் மீண்டும் முதலமைச்சராக விரும்பியிருந்தால் தமக்கே அந்தப் பதவி கிடைத்திருக்கும் என்று துணை முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் தெரிவித்தார்.
திடீர் திருப்பமாக சிவசேனா அதிருப்தி பிரிவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக்கப்பட்டதும் பாஜக மேலிடக் கட்டளையை பத்னாவிஸ் அரைமனதாக ஏற்றுக் கொண்டதும் விவாதிக்கப்பட்ட நிலையில், சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த பத்னாவிஸ் ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக்கும் படி தாம் பரிந்துரை செய்ததாகத் தெரிவித்தார்.
ஷிண்டே அரசு தாக்குப் பிடிக்காது என்பதால்தான் தாம் துணை முதலமைச்சராக கட்சியின் மேலிடக் கட்டளையை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்த பத்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேயின் தலைமையிலான அரசு தமது பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.