சீனாவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான 44 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சீனாவை சேர்ந்த நிறுவனங்களின் பூர்வீகத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், உத்தரபிரதேசம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று காலை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ஜியோமி நிறுவனமும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.